ஆளும் வல்லோனே உம்மை
நாளும் தொழுதோமே
வாழும் காலம் வரை
வல்லோன் துணைசெய்வாயே
(ஆளும்)
பண்பில் நாம் ஓங்கவே
பல்கலையும் கற்றிடவே
அல் அஹ்லா வித்தியாலயம்
இறை ஆசி பெற்றிட வேண்டுவோம்
(ஆளும்)
நெல்லுடன் பிற பயிர்களும்
நேசிக்கும் சுனை புல்லினமும்
நேர்த்திமிக்க மண் வளமும்
என்றும் பசுமை சேர்க்கும்
(ஆளும்)
கிண்ணியா மண் வாழ்த்திட்ட
கீர்த்தி மிக்க நல்லோர்கள்
நடுஊற்றில் வாழ்பெருமை
என்றும் நிலைக்க துதி செய்வோம்
(ஆளும்)